கூகள், மெட்டா நிறுவனங்களுக்கு 71 மில்லியன் டாலர் அதிரடி அபராதம் விதித்த தென்கொரியா

அமெரிக்காவின் இரு பெரிய தொழில்நுட்ப  நிறுவனங்களான கூகள்  (Google), மெட்டா (Meta) இரண்டுக்கும் தென் கொரியா 71 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அபராதமாக விதித்துள்ளது.

விளம்பர நோக்கத்திற்காக பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தரவுகளை அனுமதியின்றி பயன்படுத்திய  குற்றத்திற்காக அந்தத் தொகை விதிக்கப்பட்டது.

தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை அத்துமீறியதற்காக  தென் கொரியாவில் விதிக்கப்பட்ட ஆக உயரிய அபராதமாகவும் அது கருதப்படுகிறது.

தென்கொரியாவில் கூகளைப் பயன்படுத்திய 82 விழுக்காட்டினரும்,  மெட்டாவைப் பயன்படுத்திய 98 விழுக்காட்டினரும்  தங்களது தனிப்பட்ட விவரங்கள் கசிவதை அறிந்திருக்கவில்லை  என்று அந்நாட்டு தரவுத் தகவல் பாதுகாப்பு ஆணையம் குறிப்பிட்டது.

தென்கொரியாவில் கூகள் நிறுவனம் கைத்தொலைபேசிச் சந்தையில் மிகப் பெரிய ஆதிக்கம் செலுத்துகிறது.

அதைத் தவறான முறையில் பயன்படுத்தியதாகக் கூறி, நிறுவனத்துக்குக் கடந்த ஆண்டு 180 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

அதன் மூலம் நிறுவனம் சந்தையில் போட்டியைக் கட்டுப்படுத்த முனைந்ததாகக் குறைகூறப்பட்டது.

 

 

-mm