எலிசபெத் அரசியாரின் இறுதிச்சடங்கு – லண்டனுக்குப் புறப்பட்டுள்ள உலகத் தலைவர்கள்

எலிசபெத் அரசியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள உலகத் தலைவர்கள் லண்டனுக்குப் புறப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது துணைவியாரும் இன்று (18 செப்டம்பர்) அரசியாருக்கு மரியாதை செலுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

500 உலகத் தலைவர்களும் அரசதந்திரிகளும் 19 செப்டம்பர் நடைபெறும் அரசியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவிருக்கின்றனர்.

அரச குடும்பத்தினர் உள்ளிட்ட மொத்தம் சுமார் 2,000 பேர் நேரடியாகக் கலந்துகொள்வர்.

மில்லியன்கணக்கானோர் அரசியாரின் இறுதிச் சடங்கைத் தொலைக்காட்சியில் காண்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

-smc