அடைக்கலம் நாடுங்கள் – ஜப்பானில் இரண்டு மில்லியன் மக்களிடம் வேண்டுகோள்

ஜப்பானில் கடும்புயல் தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் அடைக்கலம் நாடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜப்பானிய வானிலை ஆய்வகம் மிகவும் அரிதாக வெளியிடும் புயல் குறித்த சிறப்பு எச்சரிக்கையை விடுத்திருப்பதாக NHK செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஜப்பானின் கியூஷு (Kyushu) தீவை நோக்கி அபாயகரமான நன்மடோல் (Nanmadol) புயல் நகர்ந்து செல்வதாக வானிலை ஆய்வகம் கூறியது.

ககோஷிமா (Kagoshima)  வட்டாரத்தின் கரையைத் தாக்கிக் கடும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஜப்பானின் தெற்குப் பகுதியில் நூற்றுக் கணக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கியூஷு தீவில் நேற்று (17 செப்டம்பர்) சில ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று மேலும் அதிகமான பயணங்கள் ரத்து செய்யப்படும்.

நன்மடோல் இந்தப் பருவத்தின் 14-ஆவது புயல்.

 

 

-mm