‘வடகிழக்கு உக்ரேனில் 10க்கும் அதிகமான “கொடுமைப்படுத்தும் அறைகள்” கண்டுபிடிக்கப்பட்டன’

உக்ரேனின் வடகிழக்குப் பகுதியில் 10க்கும் அதிகமான “கொடுமைப்படுத்தும் அறைகள்” கண்டுபிடிக்கப்பட்டதாய் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியிருக்கிறார்.

அது குறித்து CNN செய்தி வெளியிட்டுள்ளது. அறைகளில் ரஷ்யத் துருப்புகள் உக்ரேனிய  வீரர்களைத் துன்புறுத்தப் பயன்படுத்திய கருவிகளும் தென்பட்டதாய் அவர்  சொன்னார்.

ஹர்கீவ் வட்டாரத்தில் உக்ரேனியப் படைகள் சில இடங்களை மீட்டுள்ளன. அங்குள்ள கட்டடங்களில் நிலத்துக்குக் கீழ் உள்ள தளங்களில் அறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாய்ச் சொல்லப்பட்டது.

ரஷ்ய வீரர்கள் சட்ட அமலாக்கத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, உக்ரேனியர்களை மனிதத் தன்மையற்ற வகையில் துன்புறுத்தியதாய் ஹர்கீவின் வட்டார அலுவலகமும் சொன்னது.

அது குறித்துக் கருத்துக் கேட்க CNN செய்தி நிறுவனம் ரஷ்யாவைத் தொடர்பு கொண்டது. ஆனால் ரஷ்யத் தரப்பிடமிருந்து இதுவரை ஏதும் பதில் இல்லை என்று CNN சொன்னது.

 

 

-smc