கட்சித் தாவல் எதிர்ப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில் ஏன் தாமதம்- பெர்சே கேள்வி

தேர்தல் சீர்திருத்தக் குழுவான பெர்சே இந்த மாத தொடக்கத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

15வது பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால், கட்சி தாவினால், வாக்காளர்களின் விருப்பம் செல்லுபடியாகாது என்பதை உறுதிப்படுத்த இந்தச் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று பெர்சே கூறியுள்ளது.

இந்தத் திருத்தத்தின்படி, கட்சி மாறிய எம்.பி.க்களின் பதவிகள் தானாக காலியாகி, இடைத்தேர்தல் நடத்தப்படும்.

சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் ஆகஸ்ட் மாதம் செப்டம்பர் நடுப்பகுதியில் திருத்தங்கள் அமுல்படுத்தப்படும் என்று அறிவித்ததாக பெர்சே கூறியது.

இருப்பினும், மத்திய அரசிதழில் அறிவிப்பின் மூலம் யாங் டி-பெர்துவான் மன்னர் நிர்ணயித்த தேதியில் மட்டுமே சட்டம் நடைமுறைக்கு வரும் என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

“இந்த திருத்தத்தை அமல்படுத்துவது ஏன் தாமதமாகிறது என்பதில் பெர்சே ஆர்வமாக உள்ளதாக” அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும் தாமதமின்றி அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு மன்னருக்கு ஆலோசனை வழங்குமாறு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோபை அழைத்துள்ளது.

அரசியலமைப்புத் திருத்தம் எதிர்காலத் தேர்தல்களில் நல்ல வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் என்று இந்தக் குழு கூறியது.

ஜூலை 28-இல், கட்சி தாவல் எதிர்ப்பு அரசியலமைப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கு மொத்தம் 209 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர், 11 எம்.பி.க்கள் அமர்வில் கலந்து கொள்ள வில்லை.

அதோடு மேலவையில்  52 செனட்டர்கள் இந்த மசோதாவை ஆதரித்த நிலையில், வாக்கெடுப்பு நடந்தபோது ஏழு செனட்டர்கள் கலந்து கொள்ள வில்லை.

-FMT