வேலை மோசடியில் சிக்கியோரை மீட்கும் முயற்சியில் வியட்நாம், மலேசியா

கம்போடியாவில் சமூக ஊடகங்கள் மூலம் வேலைக்கு ஆள்சேர்க்கும் மோசடியில் சிக்கிய மேலும் பலர் பற்றிய தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கம்போடிய அதிகாரிகள் பவேட் (Bavet) நகரில் உள்ள ஒரு சூதாட்டக்கூடத்தில் வேலை மோசடிக்கு ஆளாகிய 11 வியட்நாமியர்களை மீட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (21 செப்டம்பர்) வியட்நாம் திரும்பினர்.இணைய மோசடி நடைபெற்ற சந்தேகத்தில் அதிகாரிகள் சூதாட்டக்கூடத்தைச் சோதனையிட்டனர்.

சூதாட்டக்கூடங்கள், ஹோட்டல்களில் நல்ல வேலைகள் வழங்கப்படுவதாகச் சமூக ஊடகங்களில் பார்த்த விளம்பரங்களை நம்பி கம்போடியாவுக்குச் சென்று மோசடிக்கு ஆளாகியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, மலேசியாவும் அந்த வட்டாரத்தில் வேலை மோசடிக்கு ஆளானவர்களை மீட்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.

பல அமைப்புகளுக்கு இடையிலான குழு கம்போடியா, லாவோஸ், மியன்மார், தாய்லந்து ஆகியவற்றில் மோசடிக் கும்பல்களிடம் சிக்கியிருக்கும் மலேசியர்களை மீட்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்துகிறது.

இதுவரை மோசடிக்கு ஆளான சுமார் 300 பேர் பற்றி புகார் செய்யப்பட்டிருக்கிறது.அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

 

 

-smc