போராட்டங்களை ஒடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தினமும் சாலைகளில் பெண்கள், ஆண்கள் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரானில் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி இளம்பெண் மாஷா அமினியை போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற அவர் கடந்த 17-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஈரானில் போராட்டம் வெடித்தது.
அரசுக்கு எதிராக பெண்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் திரண்டு போராடி வருகிறார்கள். பெண்கள் ஹிஜாப்பை எரித்தும், தலைமுடியை வெட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டங்களை ஒடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதனால் போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறைகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. தினமும் சாலைகளில் பெண்கள், ஆண்கள் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் ஈரான் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தலைவர்கள் சிலைகளுக்கு தீ வைக்கப்பட்டது. ஈரான் தலைவர் ருஹோல்லா கொமேனியின் சிலைக்கு சிலர் தீ வைத்தனர். இதில் அந்த சிலை கொளுந்துவிட்டு எரிந்தது. சிலை தீப்பற்றி எரியும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது.
இதற்கு மூத்த மத குருக்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதேபோல் சில இடங்களில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஈரானில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
-mm