கோவிட்-19 ஓர் உலகப் பிரச்சினை – பணக்கார நாடுகள் அதை மறக்கக்கூடாது: உலகச் சுகாதார நிறுவனம்

கோவிட்-19 ஓர் உலகப் பிரச்சினை என்பதைப் பணக்கார நாடுகள் மறந்துவிடக் கூடாது என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

உலகச் சுகாதார நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் புரூஸ் அய்ல்வார்ட் (Bruce Aylward) வசதி குறைந்த நாடுகளுக்கு உதவத் தவறும் பணக்கார நாடுகளின் நடத்தை நிலைமை மோசமாவதற்குப் பெரிய காரணமாக அமைகிறது என்று சுட்டினார்.

உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros  Ghebreyesus) கோவிட்-19 சூழல் இன்னும் முடிவுபெறவில்லை என்று நேற்று கூறினார்.

முன்னதாக அந்த நோய் முடிவை நெருங்கிவிட்டதாக அவர் கூறியிருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோவிட்-19 சூழல் முற்றுப்பெற்றுவிட்டதாக அறிவித்திருந்தார்.

ஆனால் உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆலோசகர் அய்ல்வார்ட் நோய்ப்பரவலை எதிர்கொள்வதில் நெருக்கடிக் கட்டத்திலிருந்து உலகம் விடுபட்டுவிடவில்லை என்று கூறுகிறார்.

அனைவருக்கும் தடுப்பூசியும் சிகிச்சையும் பரிசோதனை வாய்ப்பும் சமமாகக் கிடைக்கவேண்டும் என்று அவர் சொன்னார்.

 

 

-smc