இத்தாலியின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஜியார்ஜிய மெலோனி

இத்தாலியின்  தீவிர வலசாரித் தலைவர் ஜியார்ஜியா மெலோனி (Giorgia Meloni) பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு ஒற்றுமைக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்.

அவர் இத்தாலியின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கிறார். இத்தாலியில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாகத்  தீவிர வலசாரி அணி ஆட்சியைக் கைப்பற்றும் போல் தெரிகிறது.

தேர்தலில் மத்திய இடசாரி ஜனநாயகக் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டது. அது எதிர்க்கட்சியாகச் செயல்படும்.தீவிர வலசாரி  இத்தாலியச் சகோதரர்கள் கட்சி அரசாங்கம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பா முழுவதும் தேர்தல் முடிவை ஆவலோடு எதிர்பார்த்தது. முழு தேர்தல் முடிவு இன்று பின்னேரத்தில் வெளியிடப்படலாம்.

 

 

-smc