அமெரிக்காவில் பசி, உடற்பருமன் தொடர்பிலான பிரச்சினைகளை 2030ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கும் திட்டத்தை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அது குறித்த மாநாட்டில் பேசிய அதிபர் ஜோ பைடன், அரசாங்கம், காங்கிரஸ், தனியார் நிறுவனங்கள், சமூகம் ஆகிய அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும் என்று கூறினார்.
“அமெரிக்காவில் எந்தக் குழந்தையும் பசியுடன் தூங்கக்கூடாது. தவிர்த்திருக்கக்கூடிய நோயால் பெற்றோர் யாரும் மரணமடையக்கூடாது,” என்று அவர் சொன்னார்.அரசாங்க, தனியார்த் துறையைச் சேர்ந்த 100க்கும் அதிகமான அமைப்புகள் திட்டத்துக்கு ஏற்கெனவே 8 பில்லியன் டாலர் உறுதி அளித்துள்ளன.
அவற்றுள் மருத்துவமனைகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவுத்துறை நிறுவனங்கள் ஆகியவை அடங்கும். அமெரிக்காவில் பெரியவர்களில் சுமார் 42 விழுக்காட்டினர் உடற்பருமனாக உள்ளனர். அதே வேளை 10 விழுக்காட்டுக் குடும்பங்கள் போதிய உணவின்றித் தவிக்கின்றன.
-smc