ரஷ்யா மீது கூடுதல் தடைகளை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவைத் தண்டிக்கும் வகையில் மேலும் கூடுதல் தடைகளை அறிவித்துள்ளது.

எண்ணெய் விலை வரம்பு, வர்த்தகத் தடைகள், சர்ச்சைக்குரிய பொதுவாக்கெடுப்புகளில் ஈடுபட்டோருக்குத் தடை விதித்தல் போன்றவை அவற்றில் அடங்கும்.தடைகளை நடைமுறைப்படுத்த ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புதல் வழங்கவேண்டும்.

ஆனால் அதற்கு ஹங்கேரி இணக்கம் தெரிவிக்குமா என்பது தெரியவில்லை.இந்நிலையில், ரஷ்யாவுக்குக் கடும் பொருளியல் நெருக்கடிகளைக் கொடுக்க, அதன் நட்பு நாடுகளுடன் பணியாற்றுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரேனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ரஷ்யா நடத்திய வாக்கெடுப்புகள் போலியானவை என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.வாக்கெடுப்பு முடிவுகள் முற்றிலும் பொய்யானவை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு  தெரிவித்தது.

 

 

 

-smc