48 நாடுகள் உலகளாவிய உணவு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம்

48 நாடுகள் உலகளாவிய உணவு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த மாநாட்டில் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் ஜார்ஜீவா, உலகளாவிய உணவு நெருக்கடியைச் சமாளிக்க 20 நாடுகளுக்கு அவசர உதவி தேவைப்படலாம் என தெரிவித்துள்ளார்.

அரபு நாடுகளில் சுமார் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்பின்மைக்கு ஆளாகியுள்ளதாகவும் ஜார்ஜீவா கூறினார். இந்த நிலைமைகளை எளிதாக்கும் வகையில் உணவு வர்த்தக கட்டுப்பாடுகளை எதிர்த்து சர்வதேச நாணய நிதியம் குரல் கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

 

 

-ift