உக்ரைனுக்கு கூடுதலாக 625 மில்லியன் டாலர் நிதி உதவி – ஜெலன்ஸ்கியிடம் உறுதியளித்த ஜோ பைடன்

உக்ரைன், ரஷியா இடையிலான போர் ஏழு மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, உக்ரைனுக்கு மேலும் 625 மில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்கப்படும் என் உறுதியளித்தார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, பிரதமர் மோடி உக்ரைன் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உக்ரைன், ரஷியா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காண உதவுவதற்கு இந்தியா தயாராக இருக்கிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

-mm