சிரியாவில் வான்வழி தாக்குதல் நடத்திய அமெரிக்க படை- 2 ஐ.எஸ்.பயங்கரவாதிகள் பலி

சிரியாவின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளனர். இந்த பகுதிகளை அமெரிக்க படைகளுடன் இணைந்து சிரியா மீட்டு வருகிறது.

இந்தநிலையில் வட கிழக்கு சிரியா ஈராக் எல்லையில் ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் சில ஐ.எஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அமெரிக்க படையின் ஹெலிகாப்டர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியது. தீவிரவாதிகள் தங்கி இருந்த வீட்டின் மீது வான்வெளித்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அங்கு தங்யிருந்த தீவிரவாதி வாகித் அல் சமாரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

இதில் அவரது கூட்டாளி காயம் அடைந்தார். அவருடன் தங்கி இருந்த மேலும் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதலின் போது பொதுமக்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் சிரியாவில் மற்றொரு இடத்தில் தங்கி இருந்த அபு ஹசும் அல் உவாமி என்ற ஐ.எஸ் தீவிரவாதி அமெரிக்க படை தாக்குதலில் உயிரிழந்தார். இறந்த 2 பேரும் தீவிரவாத இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் ஆவார்கள். இதில் கொல்லப்பட்ட வாகித் அல் சமாரி கடத்தல் கும்பல்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலின் போது அருகில் வசித்து வந்த பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் அமெரிக்க படையினர் வேண்டுகோள் விடுத்தனர்.

 

-mm