பிரான்ஸில் பொது போக்குவரத்துக்களின் பயணிக்கும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக பிரான்ஸில் எதிர்பாராத வகையில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வர ஆரம்பித்துள்ளதனை புதிய புள்ளி விபரங்கள் காட்டுகின்றது.
எப்படியிருப்பினும் இதுவரையில் அரசாங்க தரப்பில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவருவது தொடர்பில் எதுவும் தீர்மானிக்கப்படவில்லை.
எப்படியிருப்பினும் சுகாதார பிரிவினரால், பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
“பிரான்சில் எட்டாது தொற்று அலை பரவி வருவது உண்மையானதென பிரான்சின் தொற்று நோய் எதிர்பு நிபுணர் (Immunologist) Brigitte Autran இது தொடர்பாக தெரிவிக்கும் போது, குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் முதியவர்கள் அல்லது எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகக்கூடியவர்களுக்கு அருகில் வசித்தால், அவர்களை பாதுகாக்கவேண்டிய தேவை உள்ளது.
அதற்கமையவே பொது போக்குவரத்துக்களில் முகக்கவசம் அணிவது அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது” என அவர் கூறியுள்ளார்.
கொவிட் 19 தொற்றினை எதிர்கொள்ள நாம் ஆசிய நாடுகளை முன் மாதிரியாக கொள்ளவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சனத்தொகை அதிகம் உள்ள நாடுகளான அவர்கள் மிக நீண்டகாலம் முகக்கவசத்தினை அணிந்து கொரோனா வைரஸ் தொற்றினை வென்றுள்ளனர்.” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரான்ஸில் குளிர் கால காய்ச்சல் தொற்று தொடர்பான அச்சமும் தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனால் இந்த குளிர்காலம் மக்களுக்கு மிகவும் ஆபத்தானதாக காணப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர்.
-ift