ஆயுதங்களை கீழே போடும் ரஷிய ராணுவ வீரர்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்கப்படும்- உக்ரைன் தகவல்

ஆயுதங்களை கைவிடுவதன் மூலம் ரஷிய ராணுவத்தை அவமானத்தில் இருந்தும் காப்பாற்ற முடியும். உக்ரைனுக்கு எதிராக போரிட மறுக்கும் ரஷிய வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்த வரும் நிலையில், ரஷிய ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுமாறு உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ரஷிய மொழியில் பேசி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆயுதங்களை கீழே போடும் ரஷிய ராணுவ வீரர்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆயுதங்களை கைவிடுவதன் மூலம் ரஷிய வீரர்கள் தங்கள் நாட்டை இன்னும் சோகத்தில் இருந்தும், ரஷிய ராணுவத்தை அவமானத்தில் இருந்தும் காப்பாற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.

உக்ரைனுக்கு எதிராக போரிட மறுக்கும் ரஷிய வீரர்களுக்கு பாதுகாப்பு மற்றும் போர் குற்றவியல் வழக்கில் இருந்து நீதியை பெற்றுத் தருவோம் என்றும் ரெஸ்னிகோவ் குறிப்பிட்டுள்ளார்.

 

-mm