கிரைமியா பாலத்தில் நடந்த வெடிகுண்டுச் சம்பவம் – ‘பயங்கரவாதத் தாக்குதல்!’: ரஷ்ய அதிபர்

ரஷ்யாவையும் கிரைமியா (Crimea)  வட்டாரத்தையும் இணைக்கும் பாலத்தில் நடந்த வெடிகுண்டுச் சம்பவத்திற்கு, உக்ரேன்தான் காரணம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் குற்றம் சுமத்தியுள்ளார்.

அது பயங்கரவாதத் தாக்குதல் என அவர் கூறினார்.அதன் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக் குழுத் தலைவருடன் நடந்த சந்திப்பில், உக்ரேனின் உளவுத்துறை தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாகத் திரு. புட்டின் கூறினார்.

ரஷ்யாவைக் கிரைமியா வட்டாரத்துடன் இணைக்கும் முக்கியப் பாலமாக அது கருதப்படுகிறது.வாரயிறுதியில் அந்தப் பாலம் வெடிகுண்டால் தகர்க்கப்பட்டது.

வெடிகுண்டு, கனரகவாகனத்தில் இருந்ததாகவும் அந்தச் சம்பவத்தில் மூவர் மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, ஸப்போரிஸ்ஸியாவின் (Zaporizhzhia) குடியிருப்பு வட்டாரத்தைக் குறிவைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

அதில் குறைந்தது 13 பேர் மாண்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.10 பிள்ளைகள் உட்பட சுமார் 90 பேர் காயமுற்றனர்.

 

 

-smc