வடகொரியா அணுவாயுதக் களைவை நோக்கிச் சென்றால், பொருளியல் ரீதியாக உதவி வழங்கத் தென் கொரியா முன்வந்துள்ளது.
நேற்று (9 அக்டோபர்) வட கொரியா மீண்டும் 2 புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியிருந்தது.கடந்த 2 வாரங்களில் 7ஆவது முறையாக நடத்தப்பட்ட ஏவுகணைச் சோதனை அது.
வடகொரியாவிடமிருந்து அதிகரித்துள்ள அச்சுறுத்தல்களுக்கு இடையே, அமெரிக்காவுடனும் ஜப்பானுடனுமான முத்தரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தைத் தென் கொரியா வலியுறுத்தி உள்ளது.
அண்மையில் வடகொரியா நடத்திய ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகியவை தொலைபேசி வழி உரையாடின.
வட கொரியா பாய்ச்சிய ஏவுகணைகள், 100 கிலோமீட்டர் உயரத்தில் 350 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியவை என்று ஜப்பான் தெரிவித்தது.அவை ஜப்பானின் சிறப்புப் பொருளியல் வட்டாரத்துக்கு வெளியே விழுந்தன.
வடகொரியாவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஜப்பான் மீண்டும் வலியுறுத்தியது.
-smc