உக்ரேனிய வட்டாரங்கள் இணைக்கப்பட்டதை எந்த நாடும் அங்கீகரிக்கக் கூடாது

உக்ரேனின் 4 வட்டாரங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதை ஐக்கிய நாட்டுச் சபை கண்டித்திருக்கிறது. 193 நாடுகளில் 143 நாடுகள் கண்டனத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

இணைப்புத் திட்டத்தை உடனே நிபந்தினையின்றிக் கைவிடும்படித் தீர்மானம் ரஷ்யாவைக் கேட்டுக்கொண்டது. எந்த நாடும் இணைப்பை அங்கீகரிக்கக் கூடாது என்றும் தீர்மானம் சொல்கிறது. உக்ரேனிலிருந்து நிபந்தனை எதுவுமின்றி ரஷ்யா உடனே வெளியேற வேண்டும் என்கிறது உலக நிறுவனத் தீர்மானம்.

தீர்மானத்தை ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் எதிர்த்தன. 45 நாடுகள் வாக்களிக்கவில்லை.

சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்கவில்லை. உக்ரேனைச் சேர்ந்த டோனெட்ஸ்க் (Donetsk), லுஹான்ஸ்க் (Luhansk), கெர்சோன் (Kherson), ஸப்போரிஸியா (Zaporizhzhia)ஆகிய 4 வட்டாரங்களை ரஷ்யா கடந்த வாரம் இணைத்துக் கொண்டது.

 

 

-smc