இந்தோனேசியாவின் ஜக்கர்த்தாவில் கடுமையான சிறுநீரகப் பாதிப்புக் காரணமாக இந்த ஆண்டு 20க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துவிட்டன.
அதற்கான காரணம் விசாரிக்கப்படும் என இந்தோனேசிய அரசாங்கம் தெரிவித்தது.மேற்கு ஆப்ரிக்க நாடான காம்பியாவில் (Gambia), காய்ச்சல் மருந்து கொடுக்கப்பட்ட சுமார் 70 குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
அதற்கும் இந்தோனேசியாவில் நிகழ்ந்ததற்கும் தொடர்பிருக்கிறதா என விசாரிக்கப்படுகிறது.விசாரணைக்கு உலகச் சுகாதார நிறுவனத்தின் (WHO) ஒத்துழைப்பை இந்தோனேசியா நாடவுள்ளது.
காம்பியாவில் விற்கப்படும் அந்த மருந்தை இந்தியாவின் Maiden Pharmaceuticals நிறுவனம் தயாரித்துள்ளது.சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படுத்தக்கூடிய diethylene glycol, ethylene glycol ஆகிய ரசாயனங்கள் மருந்தில் அதிக அளவில் இருப்பதாகக் கூறப்பட்டது.
இருப்பினும் இப்போதைக்கு அந்த மருந்துகளை தயாரிக்கும் இந்திய நிறுவனம் இந்தோனேசியாவில் பதிந்துகொள்ளவில்லை என உணவு, மருந்துக் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்தது.
-smc