சிறந்த முறையில் மக்களுக்கு சேவை செய்த பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
அவ்வகையில் கிள்ளான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று தவணைகள் செயலாற்றிய சார்ல்ஸ் சந்தியாகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஐ25 என்ற இந்திய அரசு சாரா இயக்கங்களின் ஒன்றியம் (I25) ஜன நாயக செயல் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவரைப்போன்றவர்களால் அக்கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு நிச்சயமாகக் கிட்டும் என்கிறார் இந்த ஒன்றியத்தின் ஒருங்கிணைபாளர் குணசேகரன் கருப்பையா.
மேலும் “இவர் இந்தியச் சமூக நிலையில் மட்டுமின்றி, தேசிய நிலையிலும் மிகச் சிறந்த சேவையினை வழங்கி வந்துள்ளார். இவர், தொடர்ந்து பல அரசு சாரா இயக்கங்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து பல பணிகளைச் செயல்படுத்தி வந்துள்ளார்.”என்கிறார் குணா.
சார்ல்ஸ்சின் சேவைகள் பற்றி ஐ25 குழு ஒரு நல்ல கண்ணோட்டத்தை கொண்டுள்ளதாக விவத்க்கிறார் குணா.
“இந்திய நலன் சார்ந்தவற்றிற்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார்.”
“நீர் வளம், சுற்றுச் சூழல் தொடர்பாகவும் பலமுறை கேள்விகள் எழுப்பியுள்ளார்.”
“தமிழ்ப்பள்ளி, தமிழ்க் கல்வி தொடர்பாகவும் போராடி உள்ளார்.”
மேலும், இந்திய சமூக-பொருளாதார மேம்பாடு, வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளார்.
இவருடைய முயற்சியின் வழி முதன் முறையாக சிலாங்கூரில், இந்தியர் மேம்பாட்டிற்கான ஆலோசனை மன்றம் (SICC) ஒன்று உருவாகியுள்ளது. இதன் வழி எதிர்காலங்களில் சிலாங்கூர் இந்தியர்களுக்காக பயன்மிக்க குறுகிய கால, நீண்ட கால திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு மக்களுக்கு நன்மைகள் கிட்ட வாய்ப்பு உள்ளது என்கிறார் குணா.
“நாடாளுமன்ற உறுப்பினராகக் கிள்ளான் வட்டார மக்களுக்கான நிறைவான பணிகளைச் செய்துள்ளார். குறிப்பாக, கோவிட் பெருந்தொற்று காலக்கட்டத்திலும், வெள்ளப் பேரிடரின்போதும் அரும்பாடுப்பட்டு கிள்ளான் வட்டார மக்களுக்குச் சிறந்த பணியாற்றியுள்ளார்.”
மேலும், இத்தகையவருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாது எனக் கூறப்படுகின்றது. இவரைப் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படாது போனால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் விமர்சிக்கிறார்குணா.
எனவே, இவரைப் போன்ற திறமையானவர்களை அவர்தம் கட்சிகள் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும். இதன் வழி நாட்டிற்கும் சமூகத்திற்கும் அவர்கள் அளப்பரிய சேவைகளை வழங்குவார்கள் என்பது திண்ணம் என்கிறார் இந்த ஐ25 குழுவின் ஒருங்கிணைபாளர்