‘மேற்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை’ – ஆஸ்திரேலியா

மேற்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தான் அந்நகரின் நிலை குறித்து முடிவெடுக்கப்படவேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் (Penny Wong)கூறினார்.

ஆஸ்திரேலியாவின் தூதரகம் டெல் அவிவ் நகரில் தான் இருக்கும் என்று அவர் சொன்னார்.

2018ஆம் ஆண்டு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையில் ஆஸ்திரேலியா மேற்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்தது.

அப்போது சிட்னி நகரில் யூதர்கள் அதிகம் இருந்த பகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற மோரிசன் அரசாங்கம் அந்த முடிவை எடுத்ததாகத் திருவாட்டி வோங் குறைகூறினார்.

 

 

-smc