ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் – அமெரிக்கா கண்டனம்

ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களை அமெரிக்கா கண்டித்துள்ளது.

கீவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் குறைந்தது நால்வர் மாண்டனர். நேற்று (17 அக்டோபர்) காலை மக்கள் பள்ளிகளுக்கும் வேலைக்கும் சென்றுகொண்டிருந்த வேளையில் ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு ரஷ்யா உக்ரேன் நகரங்களைத் தாக்கியது.

போர்க் குற்றங்களுக்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. அந்த ஆளில்லா வானூர்திகள் சுட்டுத் தகர்த்தப்பட்டதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) காணொளி வழியாகத் தெரிவித்தார்.

கீவுக்கு வெளியே உள்ள ஃபாஸ்டிவ் (Fastiv) நகரம், தெற்கு துறைமுகமான ஒடேசா (Odesa) ஆகியவற்றில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த வாரம் மட்டுமே உக்ரேன் இரண்டாவது முறையாக ஆகாய வழி தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

உக்ரேனில் உள்ள உள்கட்டமைப்பை ரஷ்யப் படைகள் குறிவைத்து தாக்கிவருகின்றனர்.

 

-smc