சீனா, தைவானை இணைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துகிறது: அமெரிக்கா

சீனா, தைவானை இணைத்துக்கொள்ளும் திட்டத்தை விரைவுபடுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் அந்த எச்சரிக்கையை விடுத்தார்.

முன்பு நினைத்ததைவிட மிக வேகமாக பெய்ச்சிங் செயல்படுவதாக அவர் சொன்னார். அதிபர் சி ஜின்பிங் சீனாவை மேலும் முரட்டுத்தனமாகக் கொண்டுசெல்வதாக அவர் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஒருவேளை தைவானைச் சீனா எடுத்துக்கொண்டால் அது உலகப் பொருளியலில் மிகப்பெரிய தடங்கலை ஏற்படுத்திவிடும் என்று திரு. பிளிங்கன் குறிப்பிட்டார். இப்போது இருக்கும் நிலையை இனியும் ஏற்கமுடியாது என்று சீனா முடிவுசெய்துவிட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறினார்.

ஆனால் எந்தத் தேதியில் சீனா தைவானை எடுத்துக்கொள்ளப் போகிறது என்பது பற்றி அவரால் தெளிவாகச் சொல்லமுடியவில்லை.

 

 

-smc