சுத்திகரிப்பு ஆலை ஊழியர்கள் போராட்டம்: பிரான்சில் எரி பொருளுக்கு கடும் தட்டுப்பாடு

உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. பெட்ரோல்-டீசலுக்காக பல மணிநேரம் மக்கள் வரிசையில் காத்து கிடக்கிறார்கள்.

உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு ஆகிய எரி பொருள்களின் விலை உயர்ந்தது. இந்த நிலையில் எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஊழியர்கள் திடீரென்று போராட்டத்தில் குதித்தனர்.

சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பிரான்சில் சுமார் 2 ஆயிரம் எரிபொருள் விநியோக நிலையங்களில் கையிருப்பு தீர்ந்துள்ளது. பிரான்சின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விற்பனை நிலையங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பெட்ரோல்-டீசலுக்காக பல மணிநேரம் மக்கள் வரிசையில் காத்து கிடக்கிறார்கள். சிலர் தங்களது கார்களில் எரிபொருள் தீர்ந்ததால் வாகனங்களை தள்ளிக் கொண்டு எரிபொருள் நிலையங்களுக்கு சென்றனர். பிரான்சில் எரி பொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதையடுத்து நாட்டின் எண்ணை கையிருப்பை விடுவிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

-mm