இருமல் மருந்து சர்ச்சைக்குப் பின்…அனைத்துத் திரவ மருந்துகள் மீதும் தடை விதிக்கும் இந்தோனேசியா

இந்தோனேசியா அனைத்துத் திரவ மருந்துகள் மீதும் தடை விதிக்கவுள்ளது. இவ்வாண்டு சிறுநீரகப் பாதிப்பால் கிட்டத்தட்ட 100 பிள்ளைகள் மாண்ட நிலையில் அறிவிப்பு வந்தது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 வகை இருமல் மருந்துகள் தொடர்பில் அண்மையில் சர்ச்சை ஏற்பட்டது. காம்பியாவில் (Gambia) மருந்துகளைப் பயன்படுத்திய கிட்டத்தட்ட 70 பிள்ளைகள் சிறுநீரகப் பாதிப்பால் மாண்டனர்.

அந்த மருந்துகளை இந்தோனேசியா இறக்குமதி செய்வதில்லை என்று அதிகாரிகள் கூறினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தற்போதைக்கு அனைத்துத் திரவ மருந்துகள் மீதும் தடை விதிக்கவுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

 

 

-smc