ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் (Fumio Kishida) ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசியும் (Anthony Albanese) புதிய பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளனர்.
சீனாவின் அதிகரித்துவரும் ஆதிக்கப்போக்கு, ராணுவப் பலம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் அந்த உடன்பாடு கையெழுத்தாகிறது. இருநாட்டுத் தலைவர்களும் ஆஸ்திரேலியாவின் பெர்த் (Perth) நகரில் நாளை (22 அக்டோபர்) சந்திக்கவுள்ளனர்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புதிய உடன்பாடு இருநாடுகளுக்கும் இடையிலான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை வலுப்படுத்தும். அமெரிக்காவுடனும் இந்தியாவுடனுமான ஒத்துழைப்பையும் அது மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய உடன்பாட்டின் ஓர் அம்சமாகச் சீனாவின் ராணுவப் படையும் அதன் நோக்கங்களும் மதிப்பீடு செய்யப்படும்.
-smc