நோய்ப்பரவல் தணிந்தபாடில்லை – அவசர அவசரமாக பொருள்களை வாங்கிக் குவிக்கும் சீனாவின் ஸியான் மக்கள்

சீனாவில் COVID-19 நோய்ப்பரவல் இன்னமும் தணிந்தபாடில்லை. மத்திய வட்டாரத்தின் ஸியான் (Xi’an) நகரின் சில பகுதிகளில் புதிதாக முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 13 மில்லியன் பேர் ஒரு வாரம் வீடுகளிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வட்டாரவாசிகள் அத்தியாவசியப் பொருள்களை அவசர அவசரமாக வாங்கிச் செல்லும் காட்சிகளை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது.

ஸெங்ஸோவ் (Zhengzhou), ஷாங்ஹாய் (Shanghai) உள்ளிட்ட இடங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

கிருமிப்பரவலை முற்றாகத் துடைத்தொழிக்கும் நடைமுறைகளை இரட்டிப்பாக்கும்படி அதிபர் ஸி சின்பிங் (Xi Jinping) கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

-smc