தாய்லந்தைச் சேர்ந்த திருநங்கை Miss Universe அமைப்பை 20 மில்லியன் டாலருக்கு வாங்கினார்

தாய்லந்தைச் சேர்ந்த தொழிலதிபரும் திருநங்கை ஆர்வலருமான சக்ரபோங் “அன்” சக்ரஜுதாதிப் (Chakrapong “Anne” Chakrajutathib) Miss Universe அமைப்பை 20 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்.

திருநங்கையான அவர் JKN Global Group Public Co. Ltd நிறுவனத்தின் முதலாளி. அந்த நிறுவனம் பானங்கள், அழகுப் பொருள்கள், உள்ளடக்க விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

அதன் பொருள்களை விளம்பரப்படுத்த Miss Universe பெயர் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் திருநங்கைகளின் உரிமைகளை ஊக்குவிப்பதற்காக லாப நோக்கமில்லா அமைப்பையும் நிறுவியிருக்கிறார்.

2015ஆம் ஆண்டிலிருந்து Miss Universe அமைப்பு IMG Worldwide LLC நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

 

 

 

-smc