பிகேஆர் தனது தீபகற்ப மலேசியா வேட்பாளர் பட்டியலில் இருந்து சிவராசா உட்பட எட்டு நடப்பு எம்.பி.க்களை நீக்கியது. அதோடு மூவரின் தொகுதிகளையும் மாற்றியது.
அந்த எட்டு பேர்கள் நத்ரா இஸ்மாயில் (செகிஜாங்), ஜூன் லியோ (ஹுலு சிலாங்கூர்), மரியா சின் அப்துல்லா (பெட்டாலிங் ஜெயா), சிவராசா ரசியா (சுங்கை பூலோ), தான் யீ கியூ (வாங்சா மஜு), லீ பூன் சை (கோபெங்), சான் மிங் கை ( அலோர் செட்டார்) மற்றும் ஜோஹாரி அப்துல் (சுங்கை பெட்டானி).
முறையே 69 மற்றும் 63 வயதுடைய தான் மற்றும் லீ இருவரும், தங்களின் தற்போதைய பதவிக் காலத்திற்குப் பிறகு ஓய்வு பெறும் திட்டத்தை ஏற்கனவே கட்சிக்கு தெரிவித்திருந்தனர்.
நீக்கப்பட்டவர்களில் நான்கு பேர் – லியோவ், சான், சிவராசா மற்றும் ஜோஹாரி – இந்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல்கள் நடைபெற்ற போது கட்சியின் மத்திய தலைமைப் பதவிக்கான போட்டிகளில் தோல்வியடைந்தனர்.
ஜோஹாரி மற்றும் லியோவும் முறையே பிகேஆர் சுங்கை பெட்டானி மற்றும் ஹுலு சிலாங்கூர் பிரிவுகளின் பிரிவுத் தலைவர் போட்டிகளில் தோல்வியடைந்தனர்.
ஜோஹாரியின் மகன் தௌஃபிக்கை சுங்கை பெட்டானியில் பிகேஆர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். அவர் மாநில பிகேஆர் இளைஞர் தலைவர்.
சிவராசா, சுங்கை பூலோ பிகேஆர் பிரிவுத் தலைவராக தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். இருப்பினும், வியக்கத்தக்க வகையில், சுங்கை பூலோ கட்சி வேட்பாளருக்கான போட்டியில் ஆர் ரமணன் தேர்வு செய்யப்பட்டார்.
சிவராசா பிகேஆர்-இல் ஒரு முக்கிய பிரமுகர் ஆவார், அவர் 2003 இல் பார்ட்டி ராக்யாட் மலேசியாவுடன் மக்கள் நீதி கட்சி இணைந்த நாள் முதல் கட்சியில் இருக்கிறார்.
நட்ராவைப் பொறுத்தவரை, அவர் தேசியக் கட்சித் தலைமைப் பதவியை நாடவில்லை, ஆனால் அவர் செகின்சான் பிகேஆர் பிரிவுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.
நட்ராவுக்கு 17 வாக்குகளும், வெற்றி பெற்ற யோங் தாவ் 113 வாக்குகளும் பெற்றனர்.
போட்டியிடும் தொகுதிகள்
அன்வர் இப்ராஹிம் (போர்ட் டிக்சனிலிருந்து தம்புன்)
டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் (பாண்டன்-ல் இருந்து பண்டார் ர் துன் ரசாக்)
ஷம்சுல் இஸ்கந்தர் (ஹாங் துவா ஜெயா-ச் இருந்து பாகன் டத்தோ)
தீபகற்ப மலேசியாவுக்கான 72 நாடாளுமன்ற வேட்பாளர்களின் பெயர்களை பிகேஆர் நேற்று இரவு வெளியிட்டது. பேராக்கில் சுங்கை சிபுட் மற்றும் தபா மற்றும் ஜோகூரில் உள்ள செம்ப்ராங் ஆகிய இடங்களுக்கான வேட்பாளர்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் முறையே சபா மற்றும் சரவாக்கிற்கான வேட்பாளர்களை கட்சி அறிவிக்கும்.
எனவே, நீக்கப்பட்ட அல்லது தக்கவைக்கப்பட்ட பதவியில் இருப்பவர்களின் இறுதிப் பட்டியலை இதுதான் என உறுதியாகத் தீர்மானிக்க முடியாதாம்.