பிலிப்பைன்சை புரட்டி போட்ட ‘நால்கே’ புயலுக்கு பலி எண்ணிக்கை 98-ஆக உயர்வு

பிலிப்பைன்சை உலுக்கிய நால்கே புயலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 98 பேர் பலியாகி விட்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டை இந்த ஆண்டு 2-வது முறை புயல் தாக்கி உள்ளது. அங்கு அடிக்கடி நிலச்சரிவும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 5 நாட்களாக நால்கே புயலால் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. புயல் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சூறாவளி காற்றுக்கு வீடுகளின் மேற்கூரைகள் பறந்து சென்றன, வீடுகளும் இடிந்து சேதமானது.

பிலிப்பைன்சின் மதியிண்டனாஸ் உள்ளிட்ட மாகாணங்களை புயல் புரட்டி போட்டு விட்டது. பல நகரங்கள் கடும் வெள்ளத்தில் மிதக்கிறது, ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்களால் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை.

அவர்கள் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். தலைநகர் மணிலா உள்ளிட்ட பல நகரங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டது.

இதில் பலர் இறந்து விட்டனர். குதியாஸ் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். பிலிப்பைன்சை உலுக்கிய நால்கே புயலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 98 பேர் பலியாகி விட்டனர்.

பங்கஸ் மோரா மாகாணத்தில் தான் அதிகபட்சமாக 53 பேர் இறந்து உள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 63 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. புயல் பாதித்த பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். புயல் பாதித்த பகுதிகளை பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாந்த் மார்கோஸ் இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுகிறார். பிலிப்பைன்ஸ் நாட்டை இந்த ஆண்டு 2-வது முறை புயல் தாக்கி உள்ளது. அங்கு அடிக்கடி நிலச்சரிவும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

-mm