சீனாவின் ஷங்ஹாய் நகரில் உள்ள Disney Resort உல்லாசத்தலத்தில் திடீர் COVID-19 முடக்கநிலை அறிவிக்கப்பட்டதால் உள்ளே சில வருகையாளர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.
அந்த உல்லாசத்தலம் Disneyland கேளிக்கைப் பூங்கா, Disneytown, Wishing Star Park ஆகியவற்றை உள்ளடக்கியது.அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதியாகும் வரை, Disneylandஐ விட்டு வெளியேற முடியாது என்று அந்நகர அரசாங்கம் தெரிவித்தது.
சென்ற வியாழக்கிழமை (27 அக்டோபர்) முதல் அங்குச் சென்றவர்கள் தொடர்ந்து 3 நாள்களுக்கு COVID-19 பரிசோதனையை மேற்கொண்டு கிருமித்தொற்று இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அது கூறியது.அவர்கள் குழு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அது கேட்டுக்கொண்டது.
சீனா கிருமித்தொற்றை முற்றிலும் ஒழிக்கும் கொள்கையைக் கொண்டுள்ளது.அதனால் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த திடீர் முடக்கநிலைகள், பெரிய அளவிலான பரிசோதனைகள், நீண்ட காலத்திற்குத் தனிமைப்படுத்துதல் ஆகிய உத்திகளை அது பயன்படுத்தி வருகிறது.
-smc