உக்ரேன் தலைநகர் கீவ்வில் மக்கள் குடிநீர் இல்லாமல் வதிப்படுகின்றனர். ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களால் 80 விழுக்காட்டு மக்களின் வீடுகளில் குடிநீர் இல்லை என்று கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ (Vitaliy Klitschko) கூறினார்.
குளிர்காலம் நெருங்கி வருகிறது. மக்கள் குளிர்காலத்தில் வெப்பமூட்டும் வசதி, குடிநீர், மின்சாரம் இல்லாமல் சிரமப்படவேண்டும் என்பதே ரஷ்யப் படையின் நோக்கம் என்று மேயர் குறிப்பிட்டார்.
உக்ரேன் நெடுகிலும் ஆகாயத் தாக்குதலின் அபாய ஒலி கேட்டது. தலைநகர் கீவ் தொடர்ந்து தாக்கப்படுகிறது. கீவ் நகரின் ஆகாயம் புகைமூடிக்கிடக்கிறது.
எரிசக்தி வசதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர். உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரான ஹார்கீவும் கடுமையாகத் தாக்கப்பட்டது. மின்வசதி இல்லாததால் ரயில், பேருந்துச் சேவை நின்றுவிட்டது.
-smc