‘அமெரிக்கா – தென்கொரியா ராணுவப் பயிற்சிகள் நிறுத்தப்படவேண்டும்!’ – வடகொரியா

அமெரிக்காவும் தென்கொரியாவும் நடத்தும் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகள் நிறுத்தப்பட வேண்டுமென வடகொரியா கேட்டுக்கொண்டிருக்கிறது.

அந்தப் பயிற்சிகள் சினமூட்டக் கூடியவை என்றும் மேலும் வலிமையான பதிலடி நடவடிக்கைகளுக்கு அவை இட்டுச்செல்லக் கூடுமென்றும் பியோங்யாங் தெரிவித்தது. கொரியத் தீபகற்பத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலவும் சூழல், மீண்டும் கடுமையான அதிகாரப் பூசலை உருவாக்கிவருவதாக வடகொரியா தெரிவித்தது.

அதற்கு அமெரிக்க, தென் கொரிய ராணுவங்களின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளே காரணம் என்றது பியோங்யாங். அமெரிக்காவும் தென்கொரியாவும் ஆகப் பெரிய ஆகாயப் பயிற்சிகளில் ஒன்றை நேற்றுத் (31 அக்டோபர்) தொடங்கின.

அதில் இருதரப்பையும் சேர்ந்த போர் விமானங்கள், பாவனைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

 

 

-smc