இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு – பாபர் ஆசம், சோயப் அக்தர் கண்டனம்

இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பாபர் ஆசம், சோயப் அக்தர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான்கான் தலைமையில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான்கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக இம்ரான்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம், அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பாபர் ஆசம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இம்ரான்கான் மீதான கொடூரமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதேபோல், சோயப் அக்தர், வாசிம் அக்ரம், முகமது ஹபீஸ் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

-mm