ரஷ்யாவும் சீனாவும் வட கொரியாவுக்கு முழுமையான ரகசியப் பாதுகாப்பு வழங்குகின்றன: அமெரிக்கா குற்றச்சாட்டு

ரஷ்யாவும் சீனாவும் வட கொரியாவுக்கு முழுமையான ரகசியப் பாதுகாப்பு வழங்குவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருக்கிறது.

வடகொரியா நடத்திய புவியீர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நியாயப்படுத்த அவ்விரு நாடுகளும் முடிந்தவரை வளைந்து கொடுப்பதாக வாஷிங்டன் வருத்தப்பட்டது.

பியோங்யாங் நடத்திய தொடர் ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து அதன் தொடர்பில் ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் சந்தித்துப் பேச வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் கேட்டுக் கொண்டன.

தனிப்பட்ட லாபத்தைக் கருத்தில் வைத்துக் கொண்டு பாதுகாப்பு மன்றப் பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பது தவறு என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் (Linda Thomas-Greenfield) கூறினார்.

வட கொரியாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க ரஷ்யாவும், சீனாவும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்று அரசதந்திரிகள் கருதுகின்றனர்.

 

-smc