உக்ரேனின் ஹெர்சன் (Kherson) வட்டாரத்தில் இருந்து ரஷ்யா அதன் படைகளை மீட்டுக்கொண்டது உக்ரேனியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தலைநகர் கீவ்வில் மக்கள் திரண்டு அதனைக் கொண்டாடி வருகின்றனர். ரஷ்யப் படைகள் ஹெர்சன் வட்டாரத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி தலைநகருக்கு வந்துள்ளதாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் கூறினர்.
ரஷ்யா அதிகம் குறிவைத்திருந்த ஹெர்சன் வட்டாரத்தில் இருந்து தனது படைகளை முழுமையாக மீட்டுக்கொள்வதாக அறிவித்தது. அதன் பிறகு காணொளி வழி உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) உரையாற்றினார். உக்ரேனியச் சிறப்புப் படைகள் ஹெர்சனில் உள்ளன.
தற்காப்புப் படைகள் கூடிய விரைவில் அங்குச் சென்றடைந்துவிடும் என அவர் கூறினார். இதற்கிடையே, ரஷ்யா படைகளை மீட்டுக்கொண்டது பற்றியும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும் இதுவரை தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை.
-mm