சிக்கலான சூழலிலும் சீனாவும் ஆசியானும் தொடர்ந்து முன்னேற்றம் கண்டிருக்கின்றன: சீனப் பிரதமர் லி கச்சியாங்

ஆசியான் உறுப்பு நாடுகள், கம்போடியாவில் தலைவர்களுக்கான உச்சநிலை மாநாட்டில் சீனப் பிரதமர் லி கச்சியாங் (Li Keqiang) உடனான பெரிதும் எதிர்பார்த்த சந்திப்பை நிறைவு செய்துள்ளன.

ஆசியான் தற்போது மிகவும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகக் கூட்டத்தின் தொடக்கத்தில் ஆசியான் அமைப்பின் தலைவரும் கம்போடியப் பிரதமருமான திரு. ஹுன் சென் (Hun Sen) கூறினார். தொலைநோக்குப் பார்வை கொண்ட வலுவான, விவேகமான தலைவர்கள் சரியான முடிவுகளை எடுத்து, சரியான கொள்கைகளை அமைப்பது அவசியம் என்றும் திரு. ஹுன் சென் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, சிக்கலான சூழலிலும், கடுமையான நோய்ப்பரவல் காலத்திலும் சீனாவும் ஆசியான் அமைப்பும் தொடர்ந்து முன்னேற்றம் கண்டிருப்பதாகச் சீன பிரதமர் லி கச்சியாங் கூறினார். நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளைக் காட்டிலும், இரு தரப்புகளையும் இணைக்கும் அம்சங்கள் மேலும் அதிகம் என்பதையும் அவர் சுட்டினார்.

பொருளியல் உறவுகள், அரசியல் தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இதே வேகத்தில் முன்னோக்கிச் செல்வதற்கான அவசியத்தையும் சீன பிரதமர் வலியுறுத்தினார்.

 

 

-smc