பிலிப் ரோட்ரிக்ஸ்- பாரிசான் நேஷனல், நாட்டின் சில முக்கியப் பிரச்சனைகளைச் சரிசெய்வதற்காக, சக்கரை கலந்த அறிக்கையை வெளியிட்ட பிறகு, மார்தட்டும் நிலையில் உள்ளார்கள் .
மக்களுக்கான ஒரு “புதிய ஒப்பந்தம்” என்று விவரிக்கப்படும் இந்த அறிக்கையானது, “நாட்டை வளர்ந்த நாடு நிலைக்குக் கொண்டு செல்வது” என்று விளம்பரப்படுத்தப்பட்ட பழைய கருப்பொருளையே மீண்டும் கொண்டுள்ளது.
காரணம், மலேசியா இன்னும் சிக்கலில் சிக்கியிருப்பது போல் தெரிகிறது, மேலும் நாட்டை மீண்டும் நகர்த்துவதற்கு பொதுத் தேர்தல் போன்ற ஒரு நிலத்தை அதிர வைக்கும் ஒரு நிகழ்வு தேவை. இல்லாவிட்டால் மேலும் தூசி படிந்தது போல் நாடு எப்போதும் ‘வளரும் நாடாகவே’ இருக்கும்.
பாரிசான் நேஷனல், “முழுமையான வறுமை கடந்த காலத்தின் ஒரு விஷயமாகும்” என்பது குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு முழுமையாக உதவுதல் ஆகும். பாடநூல் இல்லாத பள்ளிக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டினரை ஈர்ப்பதற்காக புதிய (பழைய) உத்திகளை உருவாக்குதல், மற்றும் தேசிய பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சில வலதுசாரி திட்டமாக முதலீட்டாளர்களை ஈர்ப்பதாகும்.
இப்படி இனிப்பு முலாம் பூசப்பட்ட அனைத்தும் வாக்காளர்களுக்குத் தூக்கி எறியப்படுகின்றன, அவர்களில் பலர் பிஎன் க்கு தங்கள் ஆதரவைக் கொடுக்க ஆசைப்படலாம்.
ஆனால் தேசிய முன்னணி தலைவர் ஜாஹிட் ஹமிடி மக்களுக்கு புதிய வாக்குறுதிகளை வழங்கியபோது, அவர் அறையில் தனக்கு அருகில் நின்ற ஊழல் என்ற மிகப்பெரிய யானையை சவகாசமாக புறக்கணித்தார்.
மலேசிய அரசியலில் நீண்ட காலமாக ஒரு தொற்று நோய் போல் பீடித்துள்ள ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அவசரத் தேவையை ஜாஹித் தேர்தல் அறிக்கையில் எங்கும் குறிப்பிடவில்லை.
மிக ஆழமான வேர்களைக் கொண்டு முளைத்துள்ள ஊழல், நமது நாட்டை ஒரு தோல்வியடைந்த நாடாக மாற்றும் அபாயம் உள்ளது என்பது ஒரு பொது அறிவு சார்ந்த முடிவாகும். .
ஆனால், ஜாஹித் வெளிப்படையாக இந்த சமூக நோய்க்கு அவசர சிகிச்சை தேவை என்று நினைக்கவில்லை. மாறாகப் பொருளாதாரத்தை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும் என்று அவர் நம்புகிறார்.
அம்னோ தலைவர், குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு உதவவும், முதலீட்டுச் சூழலை உயர்த்தவும் தனது திட்டங்களின் மூலம் மக்களின் கஷ்டங்களை பகிர்ந்து கொள்கிறார் என்ற எண்ணத்தைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்துகிறார்.
அதாவது ஜாஹிட் முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார். பரவலான ஊழல் களையெடுக்கப்படாத வரை, பொருளாதாரம் ஒருபோதும் மீளாது, என்பதை அவர் புறக்கணிக்கிறார்.
அரசாங்கம் இதில் அலட்சியமாக இருந்தால், பொருளாதாரத்திற்கு எவ்வளவு பணம் ஒதுக்கினாலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது.
ஆட்சி அமைக்கும் அரசியல்வாதிகள் ஊழலை எதிர்க்காமல் அமைதியானால், பெரும் பொதுப் பணம் அவர்களின் பாக்கெட்டுகளில் சேரும். மக்கள் மேலும் மோசம் போவார்கள்.
ஆனால், ஜாஹித் ஊழல் என்ற வார்த்தைக்குப் பயந்து அதைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்க துணியவில்லை. இது ஒரு வெளிப்படையான காரணம் அவர் அரசுப் பதவியிலிருந்தபோது ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என்பதை நாடே அறியும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றால், தான் அதில் பலிகடா ஆக வேண்டும் என்பதைப் பாகன் டத்தோ வேட்பாளர் அறிவார்.
எனவே, ஜாஹித் இந்த சமூக நோயை விட்டுவிட்டு அதற்குப் பதிலாக, சில தீங்கற்ற வாக்குறுதிகளைத் தனது கூட்டணியின் கொள்கை அறிக்கையில் இணைத்தார்.
ஆனால், நாட்டிற்கு என்ன பாதிப்பு என்று மக்களின் கண்களை அவரால் மூட முடியாது. ஊழலை பொது எதிரி நம்பர் ஒன் என்று பலர் நம்புகிறார்கள். இந்த புற்றுநோய்க்கு இனம், மதம் தெரியாது. இது அனைவரையும் அழித்துவிடும் – மிகக் குறைந்த பதவியில் உள்ள அதிகாரிகள் முதல் உயர் பதவியில் இருப்பவர்கள் வரை.
ஆனாலும் முன்னாள் துணைப் பிரதமர் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை பின்னணிக்குத் தள்ளுகிறார். ஊழலுக்கு எதிரான மிகச் சக்திவாய்ந்த ஆயுதங்களான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை ஜாஹிட்டின் அகராதியில் இருப்பதாகத் தெரியவில்லை. அவை அவரது சொற்களஞ்சியத்தில் காணப்பட்டால், அவை பேச்சளவில் மட்டுமே இருக்கும்.
எனவே, தேர்தல் அறிக்கைகளின் போரில், பிஎன் அதன் தவறான திசையுடன் மோசமாக வெளிவந்துள்ளது. அது பொருளாதார வளர்ச்சி அடிப்படை அல்ல. ஊழலின் தொடர்கதை, முட்டாள்தனம்.
-பிலிப் ரோட்ரிக்ஸ் ஒரு முன்னாள் பத்திரிகையாளர், நன்றி Aliran