124 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்தின் பெரும்பகுதியை நன்கொடை செய்யும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பேஸோஸ்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பேஸோஸ் அவரது சொத்தின் பெரும்பகுதியை நன்கொடை செய்யப்போவதாக முதல்முறையாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அதைப் பயனுள்ள வழியில் செய்வது கடினமே என்று CNN செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் கூறினார்.
அவரும் அவரின் காதலி லாரன் சான்செஸும் (Lauren Sanchez) பணத்தை நன்கொடையாக வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருவதாக பேஸோஸ் குறிப்பிட்டார்.

58 வயது பேஸோஸின் சொத்து மதிப்பு 124 பில்லியன் டாலர்.

அவரின் முன்னாள் மனைவி மெக்கன்ஸி ஸ்காட் (MacKenzie Scott) அவரது சொத்தின் பாதியைத் தானம் செய்யப்போவதாக 2019ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.

அதை அடுத்து அத்தகைய வாக்குறுதியை அளிக்க பேஸோஸிற்கு நெருக்கடி அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

உலகின் ஆகப் பெரிய செல்வந்தர்களான பில் கேட்ஸ், இலோன் மஸ்க் ஆகியோரும் அவர்களுடைய சொத்துகளின் பெரும்பகுதியை நன்கொடை செய்யப்போவதாகக் கூறியிருக்கின்றனர்.

 

 

-smc