ஈரானில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நால்வருக்கு மரண தண்டனை

ஈரானில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் (Tehran) உள்ள நீதிமன்றத்தில் அவர்கள் “இறைவனுக்கு எதிரானவர்கள்” என்று  குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரி மீது காரை மோதி அவரைக் கொன்றதாகக் கூறப்பட்டுள்ளது.

அந்த ஆர்ப்பாட்டக்காரரின் பெயர் வெளியிடப்படவில்லை. இரண்டாமவர் கத்தியும், துப்பாக்கியும் வைத்திருந்ததாகச் சொல்லப்பட்டது.

மூன்றாமவர் போக்குவரத்தை மறித்து, பயங்கரவாதச் செயலுக்குக் காரணமாயிருந்தாகவும் கூறப்பட்டுள்ளது. நான்காமவர் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இதுவரை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் தொடர்பில் ஐவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தடுத்துவைக்கப்படுவோரைக் காவல்துறையினர் துன்புறுத்தி, பொய்யான வாக்குமூலத்தைப் பெற்று அதனை அவர்களுக்கு எதிராய்ப் பயன்படுத்துவதாக நார்வேயில் உள்ள ஈரானிய மனித உரிமைக் குழு தெரிவித்தது. மரணதண்டனை விதிக்கப்பட்டதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

 

 

-smc