பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு – வளரும் நாடுகளுக்கு உதவியளிக்க அமெரிக்கா உள்ளிட்ட வசதிபடைத்த நாடுகள் எதிர்ப்பு

எகிப்தில் நடைபெறும் COP27 பருவநிலை மாநாடு இன்று நிறைவடைகிறது. பருவநிலை மாற்றச் சவால்களை எதிர்கொள்வதில் அனைத்து நாடுகளுமே உறுதியான முடிவை எடுத்துத் அவற்றின் பங்கைச் செலுத்தவேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கூறினார்.

இல்லாவிட்டால் நாடுகளுக்கு இடையே நம்பிக்கை போய்விடும் என்று அவர் எச்சரித்தார். வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையைக் கட்டிக்காப்பது முக்கியம் என்று அவர் சொன்னார்.

COP27 நகல் தீர்மானம் நேற்று வெளியிடப்பட்டது. உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் வைத்திருக்கவேண்டும் என்று தீர்மானம் சொல்கிறது.

இன்று அது குறித்த இறுதித் தீர்மானம் வெளியிடப்படும். ஆனால் நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு தொடர்கிறது. வளரும் நாடுகளுக்கு உதவ வளர்ந்த நாடுகள் நன்கொடை வழங்கவேண்டும் என்பது 20 பக்க நகல் தீர்மானம் வலியுறுத்தும் அம்சங்களில் முக்கியமானது.

அப்படி ஒரு நிதியை அமைப்பதை அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகள் எதிர்க்கின்றன. அந்த நாடுகளில் பெரிய அளவில் கரியமிலவாயு வெளியேற்றப்படுவதால் அதிகப் பணம் தர வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதே அவற்றின் கவலை.
 

 

-smc