சீனாவில் 6 மாதங்கள் கழித்து ஏற்பட்டுள்ள COVID-19 முதல் மரணம்

சீனாவில் 6 மாதங்கள் கழித்து இன்று (நவம்பர் 20) COVID-19 தொடர்பான முதல் மரணம் பதிவானது.

பெய்ச்சிங்கைச் சேர்ந்த 87 வயது முதியவர் COVID-19 நோய் தொற்றி உயிரிழந்தார். அது இவ்வாண்டு மே 26ஆம் தேதிக்குப் பிறகு  பதிவான முதல் COVID-19 மரணம் என்று சீனாவின் தேசியச் சுகாதார ஆணையம் தெரிவித்தது.

சீனாவில் இவ்வாண்டு 5,227 COVID-19 மரணங்கள் பதிவாயின. அந்நாட்டில் 92 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் குறைந்தது முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் மூத்த குடிமக்களிடையே முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

அதன் காரணமாகச் சீனா கட்டுப்பாடுகளை வலுப்படுத்தி முடக்கநிலைகளின் மூலம் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முயல்கிறது.

 

 

-smc