நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகாக பதிவாகியிருந்தது. நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுவருகின்றன.
மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிந்து விழுந்த செங்கல் வீடுகளில் புதையுண்டவர்களைத் தேடினர். பல வீடுகளில், படுக்கையறைகளுக்குள் கான்கிரீட் மற்றும் கூரை ஓடுகள் விழுந்து கிடந்தன. மதிய நிலவரப்படி 20 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது.
300 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் தணிப்பு முகமைத் தலைவர் சுஹரியாண்டோ தெரிவித்தார். நேரம் செல்லச்செல்ல மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இன்று இரவு நிலவரப்படி உயிரிழப்பு 162 ஆக உயர்ந்தது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர். நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-mm