ஐரோப்பிய கண்டம் முழுவதும் இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதத்தில் வரலாறு காணாத அளவு உயர் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
கடந்த 1991 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பதிவான சராசரி வெப்ப நிலையை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இந்தாண்டு பதிவாகியுள்ளதாக கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை மையம் தெரிவித்துள்ளது.
தீவிர வானிலை ஏற்படும் ஆபத்து
இது தொடர்பில் ஐ.நா. உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், புவி வெப்பமடைதல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2015 முதல் 2020-ம் ஆண்டு வரை அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் புவி வெப்பமடைதல் காரணமாக பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் அதிகரிக்கலாம் எனவும், கடுமையான மழை மற்றும் வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பருவநிலை மாற்றத்திற்கான தீர்வு தொடர்பாக வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் இடையே வரலாற்று உடன்படிக்கை ஏற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-tw

























