பிரான்ஸில் அச்சுறுத்தும் பருவ காய்ச்சல் – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டுகளை போல இவ்வருடமும் பருவக் காய்ச்சல் அச்சுறுத்துவதற்கு ஆரம்பித்துள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டனியில் பரவ ஆரம்பித்துள்ள காய்ச்சல் நாடு முழுவதும் மிகப்பெரிய பரவலாக மாற்றமடையும் என்பதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காய்ச்சல் ஒவ்வொரு குளிர்காலத்திலும் 2 முதல் 6 மில்லியன் மக்களை பாதிக்கிறது. தடுப்பூசி மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை , சுகாதார அமைச்சர், அதிகாரிகள் ஊடாக நினைவுப்படுத்துவதற்கு நடவடி்ககை மேற்கொண்டுள்ளார்.

அனைவரும் தங்கள் பங்கைச் சரியாக செய்தால், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் தடுப்பூசி போட ஒப்புக்கொண்டால், இந்த காய்ச்சலின் தீவிர பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரான்ஸில் இந்த குளிர்காலத்தில் காய்ச்சல் வலுவாக இருக்கும் என்பது உறுதியாகியு்ளளதென சுகாதார நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பரவுவதற்கு முன்னரே பிரான்ஸில் பரவ ஆரம்பித்துள்ளமையினால் அச்சம் அதிகரித்துள்ளதென மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் அவசர எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு, காய்ச்சல் தடுப்பூசி பிரச்சாரம் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி அன்று தொடங்கப்பட்டது. முதலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள்  போன்ற ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிகக் குறைவானவர்களே தடுப்பூசி போடுகிறார்கள் என்பது வருத்தமாக உள்ளதென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசிக்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் கொரோனா ஆகிய இரண்டிற்கும் தடுப்பூசி போடுவதற்கான அவசியத்தை சுகாதார அமைச்சர் தெளிவுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

முடிந்த அளவு மக்கள் அவதானமாக இருக்குமாறு, முகக் கவசங்களை அணியுமாறும் பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

-ift