உக்ரேனின் அணுவாலையிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறுகின்றன

ஸாப்போரிஸியா அணுவாலையிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன.

உக்ரேன் தலைநகர் கீவில் கடும்பனி வீசத் தொடங்கியிருக்கிறது. எரிசக்திப் பற்றாக்குறை பற்றி மக்கள் கவலைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.கீவில் உள்ள குடியிருப்புக் கட்டடங்களில் சுமார் 90 விழுக்காட்டு வீடுகளில், மின்சாரச் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளன.

இருப்பினும் ரஷ்யா தொடர்ந்து உக்ரேனின் எரிசக்தி விநியோகத்தைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்துகிறது. சுமார் 2 வாரங்களுக்கு முன்பு ஹெர்சன் (Kherson) நகரில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் உக்ரேனுக்குத் தொடர்ந்து ஏவுகணைகளை அனுப்பவிருப்பதாகப் பிரிட்டன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான தற்காப்பை வலுப்படுத்த அந்த உதவி வழங்கப்படுகிறது.

 

 

-smc