அமெரிக்க-ரஷ்ய அணுவாயுதப் பேச்சு ஒத்திவைப்பு

அமெரிக்க-ரஷ்ய அணுவாயுதப் பேச்சு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா அதை ஒத்தி வைத்துவிட்டது.

இருதரப்பும் எகிப்தியத் தலைநகர் கைரோவில் சந்திப்பதாக இருந்தது. புதிய START அணுவாயுதக் குறைப்பு உடன்பாட்டின்கீழ் இருதரப்பும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மீண்டும் தொடர்வது பற்றிப் பேசவிருந்தன.

ரஷ்யா தன்னிச்சையாகப் பேச்சை ஒத்தி வைத்துவிட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது. புதிய தேதியை ரஷ்யா சொல்லும்.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான புதிய START உடன்பாடு 2011-ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது. இருநாடுகளுமே எத்தனை அணுவாயுதங்களை நிறுத்திவைக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்துவது அதன் இலக்கு.

நிலத்திலும் நீருக்கு அடியிலும் நிறுத்தி வைக்கும் ஏவுகணைகள், அவற்றை எடுத்துச் செல்லும் போர்விமானங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அது கட்டுப்படுத்தும். COVID-19 காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் கண்காணிப்பு தடைப்பட்டது.
 

 

 

-smc