மனித மூளையில் சிப் பொருத்தும் தீவிர முயற்சியில் எலான் மஸ்க்!

உலகம் முழுவதும் பல பகுதிகளில் மனித மூளையை சிப் மூலம் கட்டுப்படுத்தும் மருத்துவப்பரிசோதனை 6 மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக நியூராலிங்க் நிறுவனத்தின் இணை நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் மனித மூளைக்கும் கணினிக்கும் இடையில் தொலைத்தொடர்புகளை ஏற்படுத்த அது உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் மருந்துக்கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கிடைக்கப்பெறாததால், பலமுறை தள்ளிவைக்கப்பட்டது. மேலும் நியூராலிங்க் ஊழியர்கள் பணி மீது அதிருப்தி அடைந்த எலான் மஸ்க், அதன் போட்டி நிறுவனமான சிங்க்ரானை – ஐ அணுகியுள்ளார்.

Synchron நிறுவனம் ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் 4 பேரை இந்த சோதனைக்கு உட்படுத்தியிருப்பது நினைவுகூரத்தக்கது.

 

 

-ift