இந்தோனேசியாவில் செமேரு எரிமலை வெடிப்பு; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவின் ஜாவா மாநிலத்தில் உள்ள ஆக உயரமான செமெரு எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.

அந்நாட்டு எரிமலை குறித்த விழிப்புநிலையை அதிகாரிகள் உச்சத்துக்கு உயர்த்தியுள்ளனர்.

எரிமலை சுமார் 1.6 கிலோமீட்டர் உயரத்திற்குச் சாம்பலையும் புகையையும் கக்கியதை அடுத்து, அண்டை கிராமங்களில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

எரிமலையிலிருந்து குறைந்தது 8 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் செல்லவேண்டாம் என்று குடியிருப்பாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் ஜப்பானில் சுனாமி ஏற்படக்கூடிய அபாயம் எழுந்துள்ளது.

ஆக்கினாவா (Okinawa) பகுதியில் உள்ள மியாக்கோ (Miyako), யேயாமா (Yaeyama) தீவுகளில் சுனாமி ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் Kyodo செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கடந்த ஆண்டிறுதியில், செமெரு  எரிமலை வெடித்தபோது, குறைந்தது 51 பேர் மாண்டனர்.

 

 

 

-smc